மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் வித்யூட் மண்டல். இவர் கடந்த ஆறு மாதங்களாக பொம்மையை உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார். நாள் முழுவதும் தன்னுடைய இடுப்போடு சேர்த்து கட்டிப்பிடித்துக்கொண்டே வேலைகளில் செய்து வருகிறார். மேலும் தனது பொம்மை காதலியோடு இவர் பைக்கில் சென்ற வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், எங்களுடைய உறவுமுறை குறித்து மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ நான் கண்டு கொள்வதில்லை என்னை பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை கிடையாது என்று கூறியுள்ளார்.