நாம் வாழும் உலகம் இன்று தொழில்நுட்பத்தின் ஆழத்தில் சென்று விட்டது. இருக்கின்றன. தொழில்நுட்பம் எவ்வளவு விரைவில் முன்னேறி வருகிறது என்பது வியப்பளிக்கும். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் மறுக்க முடியாதவையாகவே உள்ளன.  சென்னையில் நடந்த ஒரு சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.

Google Maps என்ற செயலி, நம்மை எளிதில் எங்கு வேண்டுமானாலும் செல்ல வழிகாட்டுகிறது. முன்னோர் காலங்களில், வழி தெரியாத போது மக்கள் மற்றவர்களை அணுகி வழி கேட்டார்கள். ஆனால் இன்று, Google Maps இல் நம்மால் எளிதில் இடத்தை தேடி செல்வதற்கான வசதி உள்ளது. ஆனாலும், சிலர் வழி தவறி ஆபத்தான இடங்களில் சிக்கிய சம்பவங்களும் தொடர்ந்து நிகழ்கிறது.

அந்த வகையில், சென்னையில் ஒரு உணவு டெலிவரி பணியாளர் Google Maps ஐ பயன்படுத்தி சதுப்பு நிலத்தில் சிக்கினார். அவர் வெளியே வர முடியாமல் தவித்தார். அருகிலுள்ள மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் மீட்பு குழுவினர் வந்து அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.