உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று அவ்வழியாக சென்றபோது திடீரென கவிழ்ந்தது. இதில் தூங்கிக் கொண்டிருந்த 8 பேரும் உயிருடன் மணலில் புதைந்தனர். அவர்களை மீட்க அப்பகுதியை சேர்ந்தவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் மணலை அகற்ற முடியாததால் புல்டோசர் மூலம் மணல் அகற்றப்பட்டு உடல்கள் மீட்கப்பட்டது.

இந்த விபத்தில் அவ்தேஷ் (40), அவருடைய மனைவி சுதா (30) இவர்களின் 3 குழந்தைகளான லல்லா (5), புட்டு (4), சுனைனா (11), இவர்களின் உறவினர் கரண் (35) மற்றும் அவருடைய மனைவி ஹீரா (30) அவர்களுடைய மகள் கோமல் (5) ஆகியோர் பரிதாபமாக இறந்துள்ளனர். அதன் பிறகு 5 வயது சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.