
உத்தரபிரதேசம் தலைநகர் லக்னோவில் ஆண் ஒருவர் தன் காதலியை புல்லட் டேங்கின் மீது அமர வைத்து வண்டியை ஓட்டுவது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் சாலையில் முழு வேகத்தில் புல்லட்டை ஓட்டுவதை வீடியோவில் காணலாம். அதே சமயத்தில் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரலான வீடியோவை மம்தா திரிபாதி என்பவர் தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். லக்னோவின் அலிகஞ்ச் அருகில் உள்ள நிராலா நகர் பாலத்தில் புல்லட் ஓட்டி வந்த நபர் தன் உயிரை பணயம் வைத்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது..
नवाबों का शहर #लखनऊ… अलीगंज के पास पास निराला नगर का पुल… जवानी का नशा और बुलेट बाइक… ये आशिक़ी का कौन सा सुरूर है जो जान की बाज़ी लगाने को तैयार है…@Uppolice सम्भालिए देश के कल को… pic.twitter.com/VA14TWdIJS
— Mamta Tripathi (@MamtaTripathi80) May 28, 2023