தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு தலையில் அடிபட்டது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பணியில் இருக்கும் நிலையில் தலையில் அடிபட்டு சென்ற ஒரு பள்ளி மாணவிக்கு சிடி ஸ்கேன் எடுக்காமல் மீட்டிங் தான் முக்கியம் என்று அந்த டாக்டர் கூறினார்.

அந்த தந்தை தன்னுடைய மகளுக்கு சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களிடம் கேட்டபோதும் அவர் அலட்சியமாக முடியாது என்று பதில் சொல்லியதோடு மீட்டிங் தான் முக்கியம் என்று கூறிவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.