பூமியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அனைத்து விதமான தன்மைகளும் இருக்கிறது. இதேபோன்று தற்போது மற்றொரு கிரகத்தையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்ற வெளிப்புற கிரகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது சூரியனை சுற்றும் கிரகங்கள் சூரிய குடும்பங்கள் என்று அழைக்கப்படும் நிலையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் வெளிப்புற கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

இவைகள் எக்சோபிளானட்ஸ் என்று அழைக்கப்படும் நிலையில், இதுவரை 5600 வெளிக்கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது மனிதர்கள் உயிர்வாழும் தன்மைகள் கொண்ட புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததோடு அதற்கு Gliese 12b என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகம் சூரியனின் எடையில் 12 சதவீதம் உள்ள நிலையில் 42 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் காணப்படுகிறது. அதோடு திரவ நீரும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகம் தொடர்பாக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்