
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான அளவில் முன்னிலையில் இருக்கிறார். இதன் காரணமாக அவருடைய வெற்றி வாய்ப்பு இப்போதே உறுதியாகிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளார்கள்.