
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது வேட்டையன் மற்றும் கூலி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்துள்ள இந்தியன் 2 படத்தை அவர் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக வந்துள்ளது என கூறியுள்ளார். இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார்.
இது கடந்த 1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்கா, நடிகர் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் கடந்த 12ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.