உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 1996-ம் கமல் மற்றும் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான இந்தியன் படம் நல்ல வரவேற்பை பெற்றதை எடுத்து தற்போது இந்தியன் 2 திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு உருவாகிறது. இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் நடிகர் கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் சென்று இறங்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை தைவானில் எடுப்பதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதற்காக படக்குழு விரைவில் தைவான் செல்கிறார்களாம். மேலும் இந்த படத்தில் ராகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் ,சித்தார்த் போன்ற பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.