
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல வேண்டும். மிகவும் உயரமான இந்த இடத்தில் இருந்து இயற்கையின் அழகை ரசிப்பதற்காக பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் செஞ்சி கோட்டைக்கு வருகின்றனர்.
இந்நிலையில் செஞ்சி கோட்டையின் மீது உள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலில் ஆலய ரத உற்சவ திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாக செஞ்சி ராஜா கோட்டைக்குச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முதல் பத்து நாட்களுக்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற திங்கட்கிழமை அதாவது ஏப்ரல் 24ஆம் தேதி முதல் மே ஒன்றாம் தேதி வரை செஞ்சி கோட்டைக்கு இலவசமாக சுற்றுலா பயணிகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.