
இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத இருக்கிறது. இந்தப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை தென் ஆப்பிரிக்கா வீரர்கள் புகழ்ந்து பேசிய வீடியோவை தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதாவது ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரோகித் சர்மாவை தென் ஆப்பிரிக்கா வீரர்களான கேசவ் மகராஜ், கெயின்ரிச் கிளாசன், டேவிட் மில்லர் மற்றும் ரபாடே ஆகியோர் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.
இதில் கேசவ் மகாராஜ், ரோகித் சர்மா ஒரு பயம் அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும், நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்றும் கூறியுள்ளார். இதேபோன்று கிளாசன், கிரிக்கெட்டில் நம்ப முடியாத நுணுக்கங்களை கொண்ட சிறந்த மூளைக்காரராக ரோகித் சர்மா இருக்கிறார் என்றும் அவருடன் நான் அதைப் பற்றி பேச விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு களத்தில் பதற்றம் அடையாமல் ரோகித் சர்மா நிதானமாக விளையாடுவதோடு டி20 போட்டியில் அவர் சிறந்த பினிஷர் ஆக இருக்கிறார் என்று டேவிட் மில்லர் கூறியுள்ளார். மேலும் உலகின் தலைசிறந்த பேட்டர் மற்றும் பவுலராக ரோகித் சர்மா திகழ்வதாக மில்லர் கூறியுள்ளார்.
Game awareness ✅
Leading from the front ✅
Calm & Composed ✅Catch #KeshavMaharaj, #DavidMiller, and #KagisoRabada as they share their thoughts on what they admire most about #TeamIndia skipper @ImRo45! 🫡🔥#Final 👉 #INDvSA | TODAY, 6 PM | #T20WorldCupOnStar pic.twitter.com/DzXmdUxERG
— Star Sports (@StarSportsIndia) June 29, 2024