
அமெரிக்க நாட்டில் ஹெலன் ஆண்டெனுச்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தற்போது வயது 81. இவருக்கு விரைவில் 82 வயது பிறக்க இருக்கிறது. இவர் ரயில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உலகின் மிக வயதான ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்ற ஹெலன் தற்போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரயில் ஓட்டுநராக தன்னுடைய பணியை தொடர்ந்தார். அப்போது அவருக்கு வயது 53. இது குறித்து ஹெலன் கூறுகையில், எனக்கு எந்த ஒரு பெருமையும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் இந்த பணியை செய்யவில்லை. எனக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால்தான் நான் வேலைக்கு வந்தேன். மேலும் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.