இத்தாலி நாட்டில் அன்டோனியா வியட்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது உலகின் மிக விலை உயர்ந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதனை தங்கம், வைரம் மற்றும் மின் கற்கள் ஆகியவற்றை பதித்து உருவாக்கியுள்ளார். இதனை அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வடிவமைத்தார்.

ஆனால் தற்போது தான் இந்த செருப்பு இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகியுள்ளது. இதனை 30 கேரட் வைர கற்களால் அலங்காரம் செய்துள்ள நிலையில் 1576 ஆம் ஆண்டுக்குப் பிறகு பூமியில் விழுந்த விண்கல்லையும் பதித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 164 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த 24 காரட் தங்க காலணிகளை உருவாக்கியவர் என்ற பெருமை ஆன்டோனியா வியட்ரியை சேரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.