
உலகில் சுமார் 6,400 பாலூட்டி வகைகள் இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள் முதல் விலங்குகள் வரை பெரும்பாலானவைகள் பாலூட்டிகள் தான். மனிதர்கள் குழந்தையாக பிறக்கும்போது தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. அதேபோன்று மாடு, ஆடு, சிங்கம், புலி, ஒட்டகம் என பெரும்பாலான விலங்குகள் பாலூட்டிகளாக இருக்கிறது.
இந்நிலையில் 6400 பாலூட்டி வகைகளில் ஒரே ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்கும் என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா.? ஆம் அது உண்மைதான். அதாவது ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் கருப்பு நிறத்தில் பால் கொடுக்கிறது. இந்த காண்டாமிருகங்களின் பாலில் 0.2% மட்டுமே கொழுப்பு இருக்கிறது. இந்த காண்டாமிருகங்களால் 4 முதல் 4 முறை வரை இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அவைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக கர்ப்பமாக இருப்பதோடு ஒரு முறைக்கு ஒரு குட்டியை மட்டுமே ஈனும். மேலும் தண்ணீர் போல இருக்கும் இதன் பால் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.