இந்திய அணியின் வெற்றி ஊர்வலம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவின்போது  விராட் கோலியிடம் பும்ராவை உலக அதிசயமாக தேர்வு செய்யலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதோடு உலக அதிசயமாக தேர்வு செய்யும் விண்ணப்பத்தில் கையெழுத்திடுவீர்களா என்றும் கேட்கப்பட்டது.

அதற்கு விராட் கோலி சற்றும் யோசிக்காமல் நிச்சயம் கையெழுத்திடுவேன் என்று கூறினார். அவர் பும்ராவை உலகின் 8-வது அதிசயமாகவும் தேசிய பொக்கிஷமாகவும் அறிவிக்கலாம் என்று கூறினார். அதோடு பும்ரா நூற்றாண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் பந்துவீச்சாளர். நான் இறுதிப்போட்டியில் கோப்பை கைநழுவி போகுமோ என்று அச்சமடைந்தேன். ஆனால் இறுதி ஓவர்களில் நடந்தது மிகவும் சிறப்பானவை. மேலும் கடைசி 5 ஓவர்களில் 2 ஓவர்களை பும்ரா வீசியது மிகவும் தனித்துவமானது என்று கூறினார்.