தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டார். நடிகர் சிம்பு கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் தக்லைப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, நான் தக்லைப் படப்பிடிப்பை முடித்துவிட்டு தான் இங்கு வந்துள்ளேன். அடுத்ததாக எஸ்டிஆர் 48 திரைப்படமும் விரைவில் தொடங்கும். உலகிலேயே அதிகம் கஷ்டப்படும் ஒரே ஆள் உண்மையை வெளிப்படையாக பேசுபவர்கள் மட்டும்தான். அதில் நானும் ஒருவன். நான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு வரும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. மேலும் மக்களவைத் தேர்தலில் ஓட்டு போட முடியாதது எனக்கு வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ளார்.