உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களில் இந்தியர்கள் பல பொறுப்பான பதவிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக பெரிய நிறுவனங்கள், அரசு பணிகள், பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பதவி வகிக்கிறார்கள். இப்படி வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கு பெரும் தொகை சம்பளமாக கிடைக்கிறது. அந்த வகையில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தமிழர் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி google சிஇஓ சுந்தர் பிச்சை தான் உலகில் அதிக சம்பளம் வாங்கும் தமிழர் ஆவார்.

அமெரிக்காவில் வசிக்கும் இவர் உலக பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சை கடந்த 2004 ஆம் ஆண்டு google நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்தார். இவர் google chrome உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் 4 வருடங்களுக்குப் பிறகு google நிறுவனத்தின் மூத்த துணை தலைவராக மாறினார். இதைத்தொடர்ந்து 2014-ல் தயாரிப்பு தலைவரான அவர் 2015 ஆம் ஆண்டு சிஇஓ-ஆக பொறுப்பேற்றார். அதோடு கடந்த 2019 ஆம் ஆண்டு google-ன் தாய் நிறுவனமான Alphabet INC-ன் சிஇஓவாகவும் பொறுப்பேற்றார். இவருடைய சம்பளம் கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ.1869 கோடி ஆகும். மேலும் இவர் அமெரிக்காவில் வசிக்கும் வீட்டின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.10,215 கோடியாகும்.