ஜப்பானில் உள்ள பெலிகோ ஜுவல்லரி நிறுவனத்தில் உள்ள தண்ணீர் பாட்டில்  உலகிலேயே மிக விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய். இந்த அதிக விலைக்கு காரணம் தூய்மை மட்டும் அல்ல. ஆடம்பரமான பேக்கிங். படிகங்களைப் போல செதுக்கப்பட்டு தண்ணீர் பாட்டில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாட்டிலும் தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளை கொண்ட உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினை பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கோபி என்ற இடத்தில் இருக்கும் இயற்கையான நீரூற்றிலிருந்து எடுக்கப்படுகிறது. அழகான தரத்தோடு தயாரிக்கப்பட்ட பாட்டில்களில் நிரப்பி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனுடைய ஆடம்பரத்திற்காகவே பலரும் இதை வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.