
சமீபத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோபோன் ஆகியவை தங்களுடைய ரீசார்ஜ் பிளான் கட்டணங்களை உயர்த்தின. இதற்கு மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கியது? என்று எதிர்க்கட்சிகளுடைய கேள்வியெழுப்பின. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசானது, பக்கத்து நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் செல்போன் கட்டணங்கள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளது.
140 நிமிடங்கள் வாய்ஸ் கால் +70 SMS + 2GB டேட்டாவை பெறுவதற்கு சீனா 8.84 டாலர் (ரூ.738 ), அமெரிக்கா 49 டாலர் (ரூ.4091), ஆப்கானிஸ்தான் 4.77 டாலர் (ரூ.398) வசூலிக்கிறது கூறியுள்ளது. இந்தியாவில் 1.87 டாலர் செலுத்தினால் ஒரு மாதத்திற்கு 18 ஜிபி டேட்டா கிடைக்கிறது என கூறியுள்ளது.