உலகில் பல நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவிலிருந்து பல இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். அந்த வகையில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி மொரிஷீயசில் அதிக அளவில் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இங்கு சுமார் 70% இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

இதேபோன்று பிரிட்டனில் 1.8% இந்தியர்களும், ஐக்கிய அரபு எமிரேட்சில் மொத்த மக்கள் தொகையில் 42 சதவீதம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 10 முதல் 13% இந்தியர்களும் வசிக்கிறார்கள். இதேபோன்று ஓமன் நாட்டில் 20% இந்தியர்களும், சிங்கப்பூரில் 7 லட்சம் இந்தியர்களும் இருக்கிறார்கள். மேலும் இதே போன்று கனடா மற்றும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் அங்கும் இந்தியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள்.