உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலவிதமான நம்பிக்கைகள் மற்றும் மதங்களை பின்பற்றுகிறார்கள். பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தினரும் கலந்து தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உலகில் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு முஸ்லிம் கூட இல்லை என்று சொன்னால் உங்களால் அதை நம்ப முடியுமா. ஆம் அது உண்மைதான். அதாவது உலகின் மிகச் சிறிய நாடாக கருதப்படும் வாடிகன் சிட்டியில் தான் ஒரு முஸ்லிம்கள் கூட வசிக்கவில்லை.

இது உலகம் முழுவதும் வசித்து வரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமாக இருக்கிறது. இங்குதான் மதகுரு போப் ஆண்டவரும் வசித்து வருகிறார். இந்த வாடிகன் சிட்டி இத்தாலியின் ரோம் நகரில் அமைந்துள்ளது. இந்த நாட்டிற்கு சொந்தமாக ராணுவம் கூட கிடையாது. அதற்கு பதில் போப்பாண்டவர்களால் நியமிக்கப்பட்ட சுவிஸ் மிஷனரிகள் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இத்தாலிய ராணுவத்தின் உதவியுடன் வாடிகன் சிட்டியை பாதுகாக்கிறார்கள். மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு புள்ளி விவரத்தின்படி வாடிகன் சிட்டியின் மக்கள் தொகை 453 ஆகும்.