
உலக அளவில் மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் அல்லது பாலியல் ரீதியிலான வன்கொடுமைகளை எதிர்கொள்வதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு நெருக்கமான நபர்களால் தான் வன்கொடுமைக்கு ஆளாவதாக தெரியவரும் நிலையில், இதனால் பாதிக்கப்படும் பெண்களுக்கு நீண்ட காலத்திற்கு கடுமையான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட, குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் காரணிகளால் மிகவும் நெருங்கியவர்களால் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் அதிகம் ஏற்படுவதை சான்றுகள் நிரூபிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.