தமிழகத்தில் இன்று தைப்பூசத் திருநாள். முருகப்பெருமானுக்கு இன்று உகந்த நாள். இன்றைய தினம் திருச்செந்தூர் மற்றும் பழனி உள்ளிட்ட பிரபலமான முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். அதோடு சில பக்தர்கள் நடைபயணமாகவும் முருகனை தரிசிக்க செல்கிறார்கள். இந்நிலையில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ் நில கடவுள் உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப்பெருமானை போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டுள்ளார்.