
பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மார்ச் 8-ஆம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, இந்திய திரையுலகின் இசை துறையில் மூன்று தலைமுறையாக கோலோச்சி வருகிற இசைஞானி இளையராஜா அவர்கள், ஒரு இந்திய இசையமைப்பாளரால் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட முதல் முழுமையான மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான “வேலியன்ட்” இசையை லண்டன் அப்பல்லோ அரங்கில் நிகழ்த்த உள்ளமைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து தொடங்கிய தனது இசை பயணத்தை தற்போது உலக அரங்கில் எடுத்துச் சென்று தனக்கென தனி முத்திரை பதித்து சாதனைகள் பல படைத்து இன்னும் பல சாதனைகள் படைக்க காத்திருக்கும் இசைஞானி திரு இளையராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்கி கொள்கிறேன் என கூறியுள்ளார்