
பல உயிர்களை காவு வாங்கிய “டைட்டானிக்” கப்பல் பல ஆண்டுகள் கடந்தும் தற்போது மீண்டும் உலகளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஆம்!, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசன்கேட் என்ற சிறிய நீர்மூழ்கி கப்பலில், டைட்டானிக் கப்பலை பார்க்க சென்ற உலக கோடீஸ்வரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதுதான். “டைட்டானிக்” என்ற பெயரில் இருக்கும் ஈர்ப்பு குறைந்தபாடு இல்லை. அந்த ஈர்ப்பில் சென்றவர்கள் தான் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் டால்பின் நீர்மூழ்கி செல்லும் அதிகபட்ச காலமே 900 அடியாகும். ஆனால் தங்களுடைய டைட்டானிக் நீர்மூழ்கியால் 13 ஆயிரத்து 100 அடி வரை செல்லலாம் என்று சொன்னது ஓசோன் கேட். கார்பன் பைபரால் தயாரிக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி 10,432 கிலோ எடை கொண்டது. அதிலிருக்கும் காப்சூலில் நீர்மூழ்கியை இயக்குபவர் உட்பட ஐந்து பேர் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. நீர்மூழ்கியை உள்ளிருக்கும் கேப்டனும், கடலுக்கு மேற்பகுதியில் இருக்கும் கப்பலில் இருப்பவரும் இயக்கலாம்.
கேமராக்கள் கடலை பார்க்க பிரத்யேக திரையை கொண்ட டைட்டானிக் நீர்மூழ்கி பேட்டரி மின்சாரத்தால் இயங்குவது மணிக்கு நான்கு கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் நான்கு உந்துதல்களை கொண்டிருக்கிறது. எலான் மஸ்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் நெட்வொர்க் சிஸ்டம் வாயிலாக இணைப்பைக் கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதில் டைட்டானிக் சிதைவுகளை கண்டு திரும்ப தலைக்கு இரண்டு கோடி ரூபாய் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அப்படி கட்டணம் செலுத்தியவர்கள் சவுத் ஆண்டனிலிருந்து அட்லாண்டிக் கடலில் சிதைவுகள் கிடக்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்து டைட்டானிக் நீர்மூழ்கியில் ஆழ்கடலுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஓசேன் கேட் CEO உட்பட ஐந்து கோடீஸ்வரர்கள் நீர்மூழ்கியில் கடலுக்குள் சென்றுள்ளனர். நீர்மூழ்கி கடலுக்குள் சென்ற இரண்டு மணி நேரத்திற்குள் மேற்பரப்பில் இருந்த கப்பலுடன் தொடர்பை இழந்துள்ளது. உடனடியாக அமெரிக்க கனடா பாதுகாப்பு படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கடலோர காவல் படை தனியார் நிறுவனங்கள் நீர்மூழ்கியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் தற்போது 5 ஏறும் உயிரிழந்துள்ளனர்.