டெல்லி மீரூட் பகுதியை சேர்ந்தவர் கௌரவ் குமார். இவர் தான் உலக சுகாதார அமைச்சகத்தில் மருத்துவராக பணி புரிவதாகவும் தலைமை அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏழு பேரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் அந்த ஏழு நபரிடம் இருந்து ஐந்து தவணையாக 14 லட்சத்து 80 ஆயிரம் வரை பணத்தை வாங்கியுள்ளார். மேலும் மெயில் மூலமாக வேலை தொடர்பாக செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

ஆனால் அதனை ஏமாந்தவர்களில் ஒருவர் சோதித்த போது அது போலியானது என்பதை தெரிந்து கொண்டு கௌரவ் குமாரை தொலைபேசியில் அழைத்து இது தொடர்பாக கேட்டுள்ளார். அப்போது கௌரவ் குமார் அந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடு்த்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் கௌரவ் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.