ஜெர்மனியின் பெர்லினில் வைத்து உலக வில்வித்தை  சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று கூட்டு பெண்கள் பிரிவின் இறுதிப் போட்டி  நடைபெற்றது. இதில் இந்திய அணியான அதிதி சுவாமி, ஜோதி சுரேகா, பர்னீத் கவுர் ஆகியோர் மெக்சிகோ அணியை எதிர்கொண்டனர். இந்த இறுதி போட்டியில் சிறப்பாக இந்திய வீராங்கனைகள் செயல்பட்டு 235 – 229 புள்ளி  கணக்கில் மெக்சிகோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் வெளியிட்டுள்ளார். அதில் “இந்திய வீராங்கனைகள் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று முதல் தங்கத்தை நாட்டிற்கு கொண்டு வந்து  பெருமை சேர்த்துள்ளனர். நமது வீராங்கனைகளின் அர்ப்பணிப்பும் கடினமான உழைப்பும் தான் இந்த வெற்றியை வழிவகுத்துள்ளது. எங்கள் சாம்பியன்களுக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.