தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் சீமான் ஆரம்ப முதலே விஜய்க்கு தான் ஆதரவை கொடுத்த நிலையில் தம்பி என்று உருகினார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் விஜய்யின் முதல் மாநாடு நடந்து முடிந்த பிறகு சீமான் சரமாரியாக விமர்சிக்க தொடங்கி விட்டார். இருப்பினும் விஜய் சீமானை விமர்சிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்திய நிலையில் சமீபத்தில் கூட பிறந்த நாள் வாழ்த்துக்களை சகோதரர் என்று கூறி தெரிவித்தார்.

அதற்கு சீமானும் தம்பி விஜய் என்று கூறி நன்றி தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது மீண்டும் சீமான் விஜயை விமர்சித்துள்ளார். அதாவது நாம் தமிழர் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளது சீமானுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் விஜய் என்ன பெரிய தலைவரா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.அதன் பிறகு அவர் கூறும் போது, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நான் யார் என்று தெரியும்.

பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்களை தேடியவர்கள் அல்ல என்னை விரும்பிய மற்றும் எனக்கு ஆதரவு கொடுக்கும் மக்கள். என்னுடைய கட்சியிலிருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என்று கூறுபவர்கள் முதலில் அவர்களிடம் உள்ள நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை காட்டட்டும். விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்  இருக்கிறார்கள் என்று கூறும் நிலையில் அவர் ஏன் உலக வெற்றி கழகம் என்று பெயர் வைக்காதது ஏன். மேலும் உங்களுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் அங்கு ஏன் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.