மதுரை மாவட்டத்திலுள்ள மேல சக்குடி பகுதியில் ரவிசங்கர் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக இருக்கும் நிலையில் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்காக சென்று விடுவார். இவருக்கு ஜெயந்தி (24) என்ற மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் ஜெயந்தி கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் திடீரென மாயமானார். அவரை கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் மதுரை சிலைமான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து ஜெயந்தி தேடி வந்தனர். இந்நிலையில் வீரகனூர் ஆற்று பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் இறந்தது ஜெயந்தி என்பது தெரியவந்தது. அவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது கட்டிட வேலைக்கு கொத்தனாரான கருப்பையா என்பவர் ஜெயந்தியை அடிக்கடி அழைத்து சென்றுள்ளார். இருவரும் வேலைக்கு ஒன்றாக சென்றபோது பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில் தங்களுடைய கள்ளக்காதலை வளர்ப்பதற்காக கருப்பையா செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக கருப்பையா செல்போனுக்கு தொடர்பு கொண்ட போதெல்லாம் ஜெயந்தியின் போன் பிசி என்று வந்துள்ளது. இதனால் தான் வாங்கிக் கொடுத்த செல்போனில் தன்னிடம் பேசாமல் வேறு யாரிடமோ ஜெயந்தி பேசுவதாக அவர் சந்தேகம் கொண்டார். இதனால் தன்னுடைய நண்பரான ஜெயகாந்தன் என்பவருடன் சேர்ந்து ஜெயந்தியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி சம்பவ நாளில் இரவு நேரத்தில் உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறி கருப்பசாமி ஜெயந்தியை அழைத்துள்ளார். இதை நம்பி ஜெயந்தி அங்கு சென்று நிலையில் ஜெயகாந்தன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஜெயந்தியை கொலை செய்து அங்கேயே சடலத்தை போட்டுவிட்டு சென்றுவிட்டனர். மேலும் ஜெயகாந்தன் மற்றும் கருப்பையா இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.