
முன்னாள் அழகி நக்ஷத்திராவும் திரைப்பட நடிகர் திருபுரன வெங்கட சாய் தேஜாவும் கடந்த 2013 ஆம் வருடம் ஒரே படத்தில் நடித்தவர்கள். இதன் பிறகு இருவரும் காதல் வயப்பட்டு 2017 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில வருடங்களாகவே தேஜாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்து வருவதாக நக்ஷ்த்திர குற்றம் சாட்டி வந்தார்.
ஆனால் தேஜா மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது தேஜா மற்றொரு பெண்ணுடன் இருக்கும் தகாத உறவு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது தேஜா மற்றொரு பெண்ணுடன் தனியாக உல்லாசமாக இருந்த நிலையில் நக்ஷத்திராவிடம் சிக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் 2016 ஆம் வருட முதல் இருவரும் விவகார தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அதனால் புதிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.