
அசாம் மாநிலத்தில் உள்துறை செயலாளராக ஐபிஎஸ் அதிகாரி ஷிலாதித்யா சேத்தியா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். இவர் அசாம் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளார். இதனால் அவர் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவருடைய மனைவி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார்.
தனியார் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் தன் மனைவியின் உடலை பார்த்து சேத்தியா கதறி துடித்தார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மனைவி இறந்து சோகத்தில் சேத்தியா தற்கொலை செய்துகொண்ட நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.