
தமிழ்நாட்டில் அடுத்த 4 முதல் 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்திய வானிலை மைய விஞ்ஞானி நரேஷ் குமார் கூறுகையில், “கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிஷா, கடலோர ஆந்திரா பகுதிகளில் 4 – 5 நாள்களுக்கு வெப்பம் தகிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் வழக்கத்தை விட வெப்பம் அதிகரிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” என்றார்