ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்த பழக்கத்தால் அவருடைய தொண்டைக்குள் முடி வளரத் தொடங்கியுள்ளது. அதாவது நீண்ட காலமாக  புகைப்பிடிக்கும் பழக்கத்தால் வரக்கூடிய வினோதமான நோய்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு தொண்டைக்குள் வீக்கம் மற்றும் முடிகள் வளர்வதை கண்ட அவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

அப்போது மருத்துவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் அவர் விடாததால் முடிகள் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு புகைபழக்கத்தை நிறுத்திய அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை மூலமாக் நிரந்தரமாக மருத்துவர்கள் முடியை நீக்கியுள்ளனர்.