
சென்னை எண்ணூரில் அனிதா என்ற 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் ஈர கையோடு செல்போனுக்கு சார்ஜ் போட்டார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மாணவி தூக்கி வீசப்பட்டார். மயங்கி விழுந்த மாணவியை பெற்றோர் உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மாணவி இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக மின்சாரத்தை கையாளும்போது ஈரக் கையால் தொடுவது ஆபத்தை விளைவிக்கும். எனவே மின்சாரத்தை கையாளும்போது மிகவும் கவனத்துடன் கையாள்வது அவசியம். செல்போனுக்கு அதிக நேரம் சார்ஜ் போடுவதால் செல்போன் வெடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியான நிலையில் தற்போது சார்ஜ் போடும்போது மாணவி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.