
இந்தியாவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள். இந்த நிலையில் வாரத்திற்கு 30 நிமிடம் அல்லது அதற்கு மேலே செல்போன் பேசினால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை 12 சதவீதம் அதிகமாகும் என்று ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆறு மணி நேரத்திற்கு மேல் பேசினால் 25% பிரச்சனை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கழுத்து, தோள்பட்டை கைகளில் தசைவலி, கடுமையான தலைவலி, காது பிரச்சனைகளும் ஏற்படும். போன்கள் வெளியிடும் ரேடியோ அலைவரிசை தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.