கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் youtube பார்த்து டயட் இருந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் ஸ்ரீதரன் மற்றும் ஸ்ரீஜா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு யதுவந்த் என்ற மகனும், 18 வயதில் ஸ்ரீ நந்தா என்ற மகளும் இருக்கிறார்கள். இதில் ஸ்ரீ நந்தா ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் நிலையில் உடல் எடை அதிகமாக இருப்பதாக அவர் நினைத்தார். இதனால் அவர் தன் எடையை குறைக்க முடிவு செய்த நிலையில் யூடியூப் பார்த்து டயட் மேற்கொண்டார். அதில் வருவது போன்று அவர் சாப்பாட்டை குறைத்து சாப்பிட்டு டயட் இருந்த நிலையில் அவருடைய உடல் நலம் மிகவும் பாதிப்படைந்தது.

இதனால் குடும்பத்தினர் உடனடியாக மாணவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது அவருடைய வயிறு மற்றும் உணவு குழாய் சுருங்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அதாவது அந்த மாணவி சாப்பிடாமல் இருந்ததால் வயிறு மற்றும் உணவுக் குழாய் சுருங்கிய நிலையில் அதற்குறிய சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது இந்த மாணவி சாப்பாட்டை குறைத்ததால் அதனால் ஏற்படக்கூடிய அனோரெக்சியா நெர்வோ என்று அரிய வகை நோய் பாதிப்பினால் இறந்துள்ளார். மேலும் கடந்த ஆறு மாதங்களாக மாணவி டயட் இருந்த நிலையில் தற்போது உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.