
கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம் இருந்த நிலையில் ஒரு மரத்தின் மீது ஏறி படமெடுத்து ஆடியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மரத்திலிருந்து பாம்பை கீழே இறக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் லாவகமாக அதனை கீழே இறக்கினர். இதனைத் தொடர்ந்து அதனை ஒரு சாக்கு முட்டையில் பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர். மேலும் இந்த சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற நிலையில் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram