இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் பாம்பு தொடர்பான வீடியோக்களை பார்த்தாலே நமக்கே ஒரு வித பயம் வந்துவிடும். இது போன்ற வீடியோக்கள் பலவிதமாக வெளியாகி வைரலாகி வர நிலையில் தற்போது ‌ பயத்தை கண் முன்னே நிறுத்துவது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது சந்திரமுகி படத்தில் பாம்பு வீட்டுக்குள் சுற்றி வருவது போன்று தற்போது ஒரு வீட்டின் காத்தாடியில் பாம்பு ‌ அமர்ந்துள்ளது. அந்த காத்தாடியை வீட்டில் உள்ளவர்கள் போட்ட நிலையில் காத்தாடி சுற்ற சுற்ற பாம்பும் சுற்றுகிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்

.