உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவில் கலந்து கொண்ட 121 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை தருவதாக இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.