
உத்திரபிரதேச மாநிலத்தில் சௌரப் ராஜ்புத் என்பவரை அவருடைய காதல் மனைவி முஷ்கான் கள்ளக்காதலன் சாகலுடன் சேர்ந்து கொலை செய்து 15 துண்டுகளாக உடம்பை வெட்டி சிமெண்ட் பூசிய டிம்பில் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முஸ்கான் மற்றும் சாகல் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தின் தாக்கமே அடங்காத நிலையில் தற்போது உத்திர பிரதேசத்தில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தீபக் குமார் என்ற 29 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சிவானி என்ற 27 வயது பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதில் தீபக் CPRF-ல் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ரயில்வேயில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆறு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட தீபக் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஷிவானி தீபக் குடும்பத்தினரிடம் கூறிய நிலையில் அவர்களுக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் அரசு ஊழியர் என்பதால் குடும்பத்தினர் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என கூறி பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தீபக் கழுத்தை நெரிக்கப்பட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
பின்னர் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிவானியைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்தான் கொலை செய்தது தெரியவந்தது. இதில் சிவானி தீபக்கின் அரசு வேலையை பெறுவதற்காக அவரை கொலை செய்திருக்கலாம் என்று தீபக்கின் தாயாரும் சகோதரரும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்பிறகு தீபக்கின் தாயாரையும் சிவானி பலமுறை அடித்த துன்புறுத்தியுள்ளார். மேலும் இந்த கொலையை சிவானி மட்டும் தனியாக செய்திருக்க முடியாது வேறொரு நபருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிப்பதால் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.