இந்திய ரயில்வே நிறுவனமான ஐ ஆர் சி டி சி உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா சேவைகளை பயணிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த வருடம் உள்நாட்டு விமான சுற்றுலாக்கள், சர்வதேச விமான பயணங்கள் மற்றும் ரயில் சுற்றுலாக்கள் குறித்து ஐ ஆர் சி டி சி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது.

இந்த நிலையில் ஊட்டியின் டூர் பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் ஐ ஆர் சி டி சி உங்களுக்கு ஹோட்டல் வசதியை வழங்கும். இந்த டூர் பேக்கேஜ் மூலமாக நீங்கள் தாவரவியல் பூங்கா, வீட்டு ஏரி மற்றும் தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்க்கலாம். இந்த டூர் பேக்கேஜுக்கு நீங்கள் 9,640 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த பேக்கேஜ் 3 இரவுகள் மற்றும் நான்கு பகல்களுக்கு இருக்கும். ஐ ஆர் சி டி சி யின் இந்த டூர் பேக்கேஜ் பற்றி விரிவாக அறிய http://www.irctctourism.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகலாம்.