
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று முளைத்த மழையில் பெய்த விஷ காளான் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன். நான் கடந்து வந்த பாதை யாருக்கும் தெரியாது என்று தனக்குத்தானே character certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்கட்சித் தலைவரே, நீங்கள் சொன்ன அந்த சேக்கிழ இராமாயணத்தை எப்போது தருவீர்கள். நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களை எப்போது தருவீர்கள். ஊர்ந்து போய் பதவி படித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும் விஷ ஜந்துக்களுக்கு நாங்கள் விஷ காளான்கள் தான்.
அதிமுக ஆட்சிக்காலத்தின் போது முன்பு அம்மா உணவகம், அம்மா உப்பு என்று பெயர் சூட்டியது தவறில்லை. ஆனால் 94 வருடங்களாக தமிழ்நாட்டுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைத்த கலைஞர் கருணாநிதியின் பெயரை திட்டங்களுக்கு வைத்தால் மட்டும் தவறா. இது தொடர்பாக நான் விளக்கம் கொடுத்ததை எடப்பாடி பழனிசாமியால் ஏற்க முடியவில்லை. உங்கள் கட்சி பெயரில் உள்ள திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞரை கண்டுபிடித்து விட்டீர்களா. இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பிறகு என்னை விமர்சிக்க வாருங்கள். மேலும் வெற்றி வார்த்தைகளும் வீண் சவடால்களும் எங்களை ஒருபோதும் தடுக்காது என்று கூறியுள்ளார்.