அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு ஓய்வு எடுக்கப் போகிற ஆள் நான் கிடையாது. ஒரு சிலர் நாட்டில் இருந்தார்கள். அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. டிவி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறுவார்கள். அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் இருந்தனர். ஆனால் நான் பிரச்சனையை தீர்க்கிறவன்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என்று எடப்பாடி பழனிசாமியால் கூற முடியுமா.? என்று கூறினார். அதோடு மக்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவை பார்த்து ஊழல் ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாரினத்து சவால் விடுத்திருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசியுள்ளார்.