இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. வருடத்திற்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்த கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அறிவிப்பை சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் சித்தராமையா அறிவிப்பார். முன்னாள் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் தலைமையிலான ஏழாவது ஊதியக்குழு அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 27.5% உயர்த்த பரிந்துரைத்துள்ளது.