
உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. குறிப்பாக கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஷேர் சாட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது spotify நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது அதிகரித்து வரும் பணவீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.