
ஐரோப்பிய ஆணையர் ஊழியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு அந்த அமைப்பு தடை விதித்துள்ளது. தரவு பாதுகாப்பு காரணங்களால் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட தொலைதொடர்பு சாதனங்களில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் சீனாவின் டிக் டாக் செயலியை நீக்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியா டிக் டாக் செயலியை தடை விதித்த நிலையிலும் அமெரிக்காவும் டிக்டாக்கிற்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய ஆணையம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.