தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், வழிபாட்டுதலங்கள்,கைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் பயன்பாட்டை குறைக்க மக்களுக்கு சில டிப்ஸ் இதோ.

ஆளில்லாத அறைகளில் ஃபேன் மற்றும் லைட் இயக்கத்தில் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வழக்கமான பல்புகளை விட LED, CFL வகையிலான மின்விளக்குகளை உபயோகிக்கலாம்.

இவை மற்ற பல்புகளை விட மூன்று சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலான மின்சார பயன்பாட்டை குறைக்கும்.

அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.

ENERGY STAR சான்றளிக்கப்பட்ட மின்சாதன பொருட்களை வாங்கும் போது பல மடங்கு மின்சார செலவை குறைக்க முடியும்.