சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை புரிந்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் ஒரே நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கலந்து கொண்டது அதிமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது எடப்பாடி பழனிச்சாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார். அதோடு சட்டசபையில் கூட அதிமுக எம்எல்ஏக்கள் இருக்கும் இடத்திற்கு செங்கோட்டையன் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டுள்ளார்.

அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை தீர்ந்துவிட்டதாக அதிமுகவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.