
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லிக்கு சென்று அங்கு கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தை நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு நேற்று இரவு ஒன்றிய அமைச்சர் அமைச்சவை சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். இதனால் வருகிற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்தது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அதிமுகவைப் பொறுத்தவரை திமுக தான் எங்களுக்கு எதிரி. திமுக ஆட்சியை நிறுத்த அதிமுக அனைத்து முயற்சிகளும் எடுக்கும். அரசியல் சூழலுக்கு தகுந்தது போல் தான் கூட்டணி அமையும். கூட்டணியில் எந்த கட்சியும் நிலையாக இருந்தது இல்லை என கூறியுள்ளார்.