
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வசித்து வரும் செல்பியா மேரி (23) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவர் மற்றும் ஐந்து வயதில் குழந்தையும் உள்ளது. இதனைப் போலவே செம்மஞ்சேரியை சேர்ந்த விஜய் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று வயது குழந்தை உள்ளது.
இந்த நிலையில் செல்பியா மேரிக்கும் விஜய்க்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் இருவரின் குடும்பத்தினருக்கும் தெரியவர குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் செல்பியா மேரி மற்றும் விஜய் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவரவர் குடும்பத்தினரை தவிக்க விட்டு விட்டு அதே பகுதியில் தனியாக வாடகை வீடு எடுத்து தனி குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் தன்னுடைய தோழி ரேகாவுக்கு செல்பியா மேரி செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளார். அதாவது என் வீட்டார் எங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள், அதனால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று மெசேஜ் அனுப்பி உள்ளார். உடனே ரேகா போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தூக்கில் தொங்கிய இருவரையும் சடலமாக மீட்டனர். இதனைத் தொடர்ந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.